• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மேயர் மகேஷ் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்..,

கன்னியாகுமரி மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் நடைபெற்ற தலைமை கழக சட்டத்துறை நிர்வாகிகள் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் கழக மாவட்ட மாநகர வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், DLC, CLC, ULC, TLC, DIVLC, உள்ளிட்ட கழக வழக்கறிஞர்கள் பங்கு பெறும் ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கழக சட்டத்துறை இணை செயலாளர் கே.எஸ்.இரவிச்சந்திரன் சட்டத்துறை துணை செயலாளர் எஸ்.ராஜாமுகம்மது மற்றும் தலைமை கழக வழக்கறிஞர் மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் பூத் கள பணிகளுக்கான ஆலோசனை வழங்கினார். உடன் தலைமை கழக வழக்கறிஞர்கள்,மாவட்டம் மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, செயலாளர்கள் உட்பட அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.