புதுக்கோட்டை மாவட்ட ஐடி விங் சார்பில், ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ரஞ்சித்குமார் ஏற்பாட்டில் இலுப்பூரில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் டாக்டர். சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார்
இந்த ஆலோசனை கூட்டத்தில் நடைபெற இருக்கின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் IT WING செய்ய வேண்டிய பயணிகள் குறித்தும், விரைவில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தோடு புரட்சித்தமிழரின் எழுச்சிப்பயணம் செய்து புதுக்கோட்டைக்கு வருகை தர இருக்கும் கழக பொதுச்செயலாளர், நாளைய முதலைமைச்சர் எடப்பாடியார் அவர்களுக்கு IT Wing சார்பில் செய்ய வேண்டிய வரவேற்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

பின்னர் IT WING நிர்வாகிகள் அனைவரிடமும் திண்ணை பிரச்சாரம் செய்வதற்காக புரட்சித்தமிழரின் எழுச்சிப்பயணம் லோகோ வழங்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு திருச்சி மண்டலச் செயலாளர் மணிகண்டன், மண்டல இணைச் செயலாளர் சதீஷ்குமார் , இலுப்பூர் நகர கழக செயலாளர் சத்யா மணிகண்டன், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர செயலாளர்கள் மற்றும் ஒன்றிய ஐடி விங் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
