குமரி மாவட்டம் மக்களால் அப்பச்சி என்ற புகழ் வார்த்தையால் காமராஜர் போற்றப்படும் குமரி மக்களால். பெரும் தலைவர் காமராஜர் அன்றைய நாகர்கோவில் மக்களவை தொகுதியில்.1969_ இடைத்தேர்தலில்,1971_பொதுதேர்தலில் குமரி மக்களால் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வென்றவர் பெரும் தலைவர் காமராஜர்.


பெரும் தலைவரின் புகழுக்கு இழிவு ஏற்படுத்தும் படி
யூடியூபர் முக்தார் அகமது வெளிப்படுத்திய ஏளனமான கருத்தை கண்டித்து. முக்தார் அகமதுவை காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் தமிழகமெங்கும் எதிரொலிக்கும் நேரத்தில். குமரி மாவட்டத்தில் இந்த கண்டகுரல் சற்று வலிமையாக உள்ளது.

தக்கலை அருகே மணலி சந்திப்பில் நேற்று மாலை(டிசம்பர்_13)ம் நாளில்.
தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற யூடியூபர் முக்தார் அகமதுவை கைது செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில். விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர்
தாரகைகத்பட். குமரி கிழக்கு, மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்களான
டாக்டர் பினுலால்சிங், கே.டி உதயம், முன்னாள் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்று கண்டனக் குரல் எழுப்பி கொண்டிருந்த நிலையில் எவரும் எதிர் பாராத நிலையில். இளைஞர் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் கள்,கண் இமைக்கும் நேரத்தில். பலத்த காவல்துறை குவிக்கப்பட்டிருந்தும். திடிரென முக்தார் அகமதுவின் ‘உருவபெம்மையை’
கூட்டத்தின் இடையில் எரித்தனர். இந்த சூழலில் காவல்துறை உருவபொம்மை எரிப்பதை தடுக்க முயன்ற போது,

காவல்துறையினர் இளைஞர் காங்கிரஸ் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டாலும்.முக்தார்
அகமது வின் உருவபொம்மையை முழுமையாக எறிந்தது.
காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்காது காலம் கடத்திலால். குமரி மாவட்டம் முழுவதும் தழுவிய போராட்டம் நடத்தப்படும். பெரும் தலைவர் பெருமைக்கு இழிவு ஏற்படுத்தும் முக்தார் அகமதுவை முதல்வர் ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுத்து கைது செய்யவேண்டும். கூட்டணி வேறு, கொள்கை வேறு எனவும். தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.




