மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்க நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசை கண்டித்து அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள காந்தி சிலை முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர் தலைமை வகித்தார். நகரத் தலைவர் மா. மு.சிவக்குமார்,மாவட்ட பொருளாளர் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் ஆண்டிமடம் ராஜசேகர் மாவட்ட துணைத் தலைவர்கள் ஏ.பி.எஸ்.பழனிசாமி, ராகவன் , கலைச்செல்வன், வட்டார தலைவர்கள் பாலகிருஷ்ணன், திருநாவுக்கரசு, கர்ணன், கங்காதுரை, அழகானந்தம், மாவட்ட மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாளை எம். ஆர், பாலாஜி,சாத்தமங்கலம் பாண்டியராஜன்,மகளிர் அணி நிர்வாகிகள் ரேணுகா தேவி, சகுந்தலா தேவி,நகர காங்கிரஸ் நிர்வாகிகள் ஏ ஆர் செந்தில்வேல் , அப்பாதுரை, அன்பழகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.






