நாகர்கோவிலில் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலரும், மண்டல தலைவருமான செல்வகுமார் மகள் ஷாம் ஷானாவின் பூப்புனித நீராட்டு விழா நிகழ்வில்,
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெரும்தகை, குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் பூரூஸ், குமரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார் பிரின்ஸ் தாரகைகத்பட், கன்னியாகுமரி சட்டமன்ற அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பச்சைமால்
நான்குநேரி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ரூபி மனோகர் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர். நாகர்கோவில் மாநகராட்சி அனைத்து கட்சி வார்ட் உறுப்பினர்கள்
கட்சி பேதமின்றி அனைத்துக்கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்று விழா காணும் செல்வியை வாழ்த்தினார்கள்.

திருமண நிகழ்வுக்கு பின், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற. குமரி கிழக்கு, மேற்கு மாவட்ட கட்சியினருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் பல்வேறு கருத்துக்கள் குறித்து கலந்தாலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த செல்வபெரும்தகை நெல்லையில் அமித்ஷா பேச்சு காலத்திற்கும், நடைமுறைக்கும் ஏற்றதல்ல. ஒவ்வொரு தேர்தல் முடிவுக்கு பின் தான் இந்திய வாக்காளர்கள் தான் முதல்வர் களை,பிரதமரை தேர்வு செய்கின்றனர்.
அமித்ஷா வார்த்தையிலே அடுத்த பிரதமர் தலைவர் ராகுல் காந்தி தான் என அவரை அறியாமலே தெரிவித்துவிட்டார்.

சிறை தண்டனை 30 நாள் அனுபவித்தால் வகிக்கும் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்ற கருப்பு சட்டத்தை,இந்தியா கூட்டணி கடுமையாக கண்டிக்கின்றது.
பீஹாரில் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற, நடக்கவிருக்கிற ஊர்வலம் மக்கள் திரள் கூட்டம் இதுவரை இந்தியா காணாத காட்சி என தெரிவித்தார்.