• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் தனது சொந்த ஊரில் வாக்குகள் சேகரிப்பு

இந்திய கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் தனது சொந்த ஊரில் வாக்குகள் சேகரித்தார்

கன்னியாகுமரி நாடாளுமன்ற இந்திய கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்த் தனது ஊரில் இன்று வாக்குகள் சேகரித்தார். வாக்கு சேகரிக்க வருகை தந்த வேட்பாளர் அவர்களை காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். அங்கு உள்ள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 

பின்னர் அகஸ்தீஸ்வரம் பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று அனைத்து தெருக்களிலும் நடந்து சென்று வீடு வீடாக வாக்குகள் சேகரித்தார். ஊர்மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்று சால்வை அணிவித்தனர்.
இந்த வாக்கு சேகரிப்பின் போது மாவட்ட தலைவர் கே. டி உதயம், மாநில செயலாளர் சினிவாசன், திமுக ஒன்றிய செயலாளர் பாபு, அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன், அகஸ்தீஸ்வரம் பேரூர் காங்கிரஸ் தலைவர் விஜி மற்றும் வார்டு உறுப்பினர்கள், இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சுமார் 3 மணி நேரம் அனைத்து பகுதிகளுக்கும் நடந்தே சென்று வாக்கு சேகரித்த போது அந்த பகுதியில் உள்ள அய்யா வைகுண்டர் பதி மற்றும் அம்மன் கோவிலில் நடைபெற்ற இரவு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.