2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்திய குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளில் வெற்றி பெற்ற கோவை சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் 45 மாணவர்களைப் பாராட்டும் விதமாக ஒரு விழா சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் கிராஸ் கட் சாலை கிளையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கோயம்புத்தூர் வடக்கு மாநகர காவல் துணை ஆணையர் தேவநாதன் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றியாளர்களைக் கௌரவித்தார்.
சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் கோயம்புத்தூர் கிளையின் தலைவர் ஆர்.எஸ். அருண், தலைமை நிர்வாக அதிகாரி யாஸ்மி அருண், ஆசிரியர்கள் மற்றும் விருந்தினர்கள் ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பேசிய ஆர்.எஸ். அருண் தனது மாணவர்கள் மற்றும் 9 ஆசிரியர்கள் இப்போது தமிழக அரசு அதிகாரிகளாகி இருப்பதைப் பார்ப்பது மிகப்பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாகத் தெரிவித்தார்.

“இதுபோன்ற தருணங்கள்தான் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் எங்களை மேலும் ஊக்கப்படுத்துகின்றன” என்று கூறிய அவர், இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த வெற்றியாளர்களையும், ஆசிரியர்கள் மற்றும் உதவிப் பணியாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
அரசு அதிகாரியாக, ஒரு கோப்பில் நீங்கள் போடும் ஒவ்வொரு கையெழுத்தும் பலரது வாழ்க்கையை மாற்றும் திறன் கொண்டது. எனவே, எப்போதுமே ஒரு நிமிடம் சிந்தித்து, சரியானதைச் செய்யுங்கள், என்று அறிவுறுத்தினார்.
