திருவள்ளுவர், அதங்கோடு ஆசான், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை என்ற எழுத்துலக ஜாம்பவான்கள் தோன்றி,எழுத்தில் சாதனை படைத்தவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பில் . புதிய எழுத்தாளர்களாக வளர்ந்து வரும்,இரு பால் எழுத்துலகின் புதிய அரும்புகள் அவர்களின் படைப்பு பற்றி எழுத்தாளர்கள் மத்தியில் அவர்கள் எழுதிய கதையை ” கதைப்போமா ” என்ற நிகழ்வை, தக்கலை வாசகர் வட்டமும், நியூ செஞ்சுரி வாசகர் வட்டமும் இணைந்து காலை முதல் மாலை வரை தக்கலையில் நடந்த நிகழ்ச்சியில் 40_க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றார்கள்.
படைப்பளியே அவர் எழுதிய ஒரு கதையை படைப்பாளிகள் மத்தியில் வாசிக்க வேண்டும்.

கூடியிருந்தவர்களில் மூத்த எழுத்தாளர் முட்டம் வால்டர். மீனவ சமுகத்தை சேர்ந்தவர். மீனவ கிராமங்களின் வாழ்வியல், மீன்பிடி தொழில்,படகு வலை,இவற்றுடன் மீனவ கிராமத்தில் எழும் இரண்டு குழுக்களால் ஏற்படும் மோதல் அதில் படகுகள் “தீ”யில் பற்றி எரிவதும். மீனவ கிராமம் முழுவதும் காவல்துறை புகுந்து நடத்தும் அளிசாட்டியம் ஆண்கள் தலைமறைமாவது என்ற எதார்த்தத்தை எழுத்தில் படம் பிடித்து காண்பித்தார். பெர்லின் என்ற மீனவ சமுகத்தை சேர்ந்தவர் அவரது கதையில் காடற்கரை பகுதி கல்யாணம், ஞானஸ்நானம்,புது நன்மை நிகழ்வில் அள்ளி வீசும் காந்தி பணத்தாள்,வயது முதிர்ந்த பெற்றோர்களை பிரித்து வயோதிகர் இல்லத்தின் விட்டு விடும் கொடுமையை எதார்த்தமாக வெளிப்படுத்தினார்.
பத்திரிகையாளரும்,படைப்பாளருமான லாசர். குமரியின் முக்கிய விவசாயமான ரப்பர் பால் வெட்டும் தொழிலில் இரண்டாம் பால் என்பது ஒரு முக்கியமான ரப்பர் பால் சேகரிப்பு. மழை நாளில் ஒரு பெண் தொழிலாளிக்கு இரண்டாம் ரப்பர் பால் சேகரிப்பு பற்றிய மன நிலையை எதார்த்தமான அவரது கதையான “இரண்டாம் பால்”காதை குமரி மண் சார்ந்த கதையாக இருந்தது.

எஸ்.ஜே.சிவசங்கர் படைப்பாளிகள் சங்கத்தின் நோக்கம் பற்றி தெரிவித்தார்.
ஒட்டுமொத்த நிகழ்வின் அறிமுகம்,கதை வாசிக்கும் படைப்பாளியின் எழுத்தின் தனித்த தன்மை இவற்றை ஒவ்வொரு கதை வாசிப்பவர் பற்றிய தகவலை வரிசை படுத்தினார் நடன சிவக்குமார், ஆசிரியர் பணி குமரி ஆதவன். நாகலாந்து என்ற யுத்தபூமியில் ஆசிரியராக பணி ஆற்றிய காலத்தில் அவர் கண் எதிரே கண்ட ஒரு காட்சியை கதையாக வடித்திருந்ததை, எதார்த்த நிலையை அவரது கதையில் பதிவு செய்திருந்தார்.
ஆங்கில பேராசிரியர் சப்திகா. திருச்செந்தூர்_நாகர்கோவில் பேரூந்தில் பயணிகளின் கூட்டம். பேரூந்தில் உடன் பயணித்த திருநங்கை ஒருவரின் நில பற்றி. திருநங்கை அணிந்திருந்த உடையின் வண்ணத்தை குறித்து “சிகப்பு சேலைக்காரி” என்ற தலைப்பில் எழுதிய கதையை வாசித்தார்.

குமரி உத்ரா அவரது பள்ளி நாட்களில் பார்த்த ஒரு பித்தம் பேதலித்த வடநாட்டு பெண்ணைபற்றி “மொட்டை செரிக்கி” கதையில் வரும் கதாபாத்திரம் (இன்றும் பல ஊர்களில் நடமாடும் வெளி மாநில பித்தம் பேதலித்த பெண்கள்) பற்றிய அவரது படைப்பை வாசித்தார். குமரி உத்ராவின் கதை நாயகி போன்ற வெளிமாநிலத்தை சேர்ந்த “மாய்”என்ற முதாட்டி கன்னியாகுமரியில் உள்ள மக்களால் ஒரு வழிபாட்டுக்கு உரியவராக திகழ்ந்தார். (கன்னியாகுமரியில் மாயம்மா பெயரில் பெரிய கோவில் ஒன்று உள்ளது)



கதை வாசிப்பின் காலம் நீண்டு போனதால்.தக்கலையை சேர்ந்த ஐ.கென்னடி மற்றும் கல்லூரியில் பணியாற்றும் செளமியா சுதாகரன் காலையில் இருந்து மாலை வரை நிகழ்வில் பங்கேற்றும் அவர்கள் இருவரும் அவர்களது கதையை வாசிக்க முடியாது போனது.


தக்கலை பகுதியில் இன்று எழுத்தாளர்கள் தூவிய கதை விதைகள்,எதிர்காலத்தின் எழுத்துலகில் நம்பிக்கை விதைகளாக, நிகழ்வில் ஒவ்வொருவர் கதை சொல்லும் போது ஒளிப்பதிவாளர் மட்டும் அல்லாது படைப்பாளியும் ஆன ஜவஹரின் கேமரா மின்னல் ஒளி பாச்சி நிழல் படம் எடுத்தது.
