• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மாநாடு கொண்டாட்டம் – ரசிகர்களுடன் எஸ்.டி.ஆர் செல்ஃபி!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் -24ம் தேதி வெளியான திரைப்படம் மாநாடு.

மேலும் கல்யாணி பிரியதர்சன், சிம்புவுக்கு இணையான கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி அமரன், கருணாகரன், அஞ்சேனா கிருத்தி, அரவிந்த் ஆகாஷ் மற்றும் மனோஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

நீண்ட ஆண்டுகள் கழித்து சிம்புவிற்கு ஒரு கம் பேக் படமாக மாநாடு அமைந்தது. சாதாரண கதையை டைம் லூப் கதையாக மாற்றி ரசிகர்களுக்கு புரியும் படி, வெங்கட் பிரபு கொடுத்திருந்தார். இசையமைப்பாள யுவன் ஷங்கர் ராஜா படத்தின் பின்னணி இசையை படத்தின் பாதி பக்கபலமாக அமைந்தது. படத்தில் எடிட்டராக பிராவின் கே.எல் பணியாற்றியிருந்தார்.

இந்நிலையில் இன்றுடன் மாநாடு திரைப்படம் திரையரங்குகளில் ஓடி 100 நாள் என்பதால் 100-வது நாள் கொண்டாட்டத்திற்கு நடிகர் சிம்பு கோயம்பேடு ரோகிணி திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்துள்ளார். அதன்பிறகு “நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை” என கூறி ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.