• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொடூர கொலைக்கு கண்டனம் தெரிவித்து, கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தம் !

BySeenu

Aug 18, 2024

கொல்கத்தாவில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் கொடூர கொலைக்கு கண்டனம் தெரிவித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தம் ! புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு நோயாளிகள் காத்திருப்பு.

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி பணியில் இருந்தமுதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல்வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையிலே, இந்த கொடூர செயல் மீது வழக்கு பதிந்த போலிசார், குற்றவாளி சஞ்சய் ராய் என்ற நபரை கைதுசெய்தனர். இந்த குற்றத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதன் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. பெண் மருத்துவர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையிலே, பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை ஏற்படுத்த வலியுறுத்தியும் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று 24 மணிநேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அழைப்பு விடுத்துள்ளது.

அதன் அடிப்படையில் கோவை அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் பணிக்கு வரவில்லை. கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் 6 ஆயிரம் நபர்கள் புற நோயாளிகளாக சிகிச்சைக்காக வருவது வழக்கம்.

இந்த நிலையிலே, மருத்துவர்கள் பணி புறக்கணிப்பினால், சிகிச்சை தருவதில் தோய்வடைந்தன. மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு, அவசர சிகிச்சைக்கு வருவோருக்கு மருத்துவர்கள் வழக்கமான முறையில் சிகிச்சை தந்து வருகின்றனர்.

தினமும் வரும் புறநோயாளி பிரிவில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் காத்துக் கிடக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.