• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் காவல் ஆணையரிடம் புகார் மனு

BySeenu

May 9, 2024
கோவை லங்கா கார்னர் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.மது குடிக்க வரும் மது பிரியர்கள் தினசரி அப்பகுதியில் இருக்கும் பொது மக்களிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்கள் முன்பு சென்னை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு அப்பகுதியில் இருக்கும் பொது மக்களிடம் தகராறு ஈடுபட்டது இல்லாமல் மேலும் 3 நபர்களை மது பாட்டில்களால் தாக்கி உள்ளனர். காயம் அடைந்த பொது மக்களை உடனடியாக அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்தப் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையால் தினசரி பிரச்சனை ஏற்பட்டு வருவதாலும் பொதுமக்கள் நிம்மதியாக அப்பகுதியில் வசிக்க முடியவில்லை என்றும் கடைகள் நடத்த முடியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து பலமுறை கோவை மாவட்ட ஆட்சியரிடமும்,காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கும் மேற்கொள்ளவில்லை என்றும் மீண்டும் மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தனர்.

கோவை மாநகர் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

லங்கா கார்னர் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இதனால் உயிர் பலிகள் ஏற்படும் அபாயம் நிழவி வருவதாக பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.