கரூர்- வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு பேனரை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் .
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், வருகின்ற 11ஆம் தேதி வன்னியர் சங்கத்தின் சித்திரை முழு நிலவு திருவிழா மாநாடு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அதற்கு உண்டான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், கரூர் மற்றும் புறநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் மாநாட்டு சார்பில் பேனர் வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்காக கரூர் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் பிரேம் ஆனந்த் சார்பில், கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விளம்பர நிறுவனத்தின் மூலம் வைத்துள்ளனர்.
மாநாட்டுக்காக வைக்கப்பட்ட பேனரை சிலர் சேதப்படுத்தியதாக கரூர் நகர காவல் நிலையத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் பிரேம் ஆனந்த் இன்று கட்சி நிர்வாகிகளுடன் சென்று புகார் அளித்துள்ளார் .
மேலும், இது சம்பந்தமாக கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறிய முன்னாள் மாவட்ட செயலாளர், இதுபோன்ற சம்பவங்கள் இனி
நடைபெறாமல் இருக்க காவல்துறை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
புகார் அளித்த பிறகு இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளதாகவும் பிரேம் ஆனந்த் தெரிவித்தார்.







; ?>)
; ?>)
; ?>)