புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட அரியாணிப்பட்டியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் முத்துமணி. இவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.

அதில் கடந்த 06/02/2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சப்பேட்டை, புனல் குளம் பகுதிகளில் 60 ஏக்கருக்கு மேலான நிலப்பரப்பில் புனல் குளம் பகுதி சேர்ந்த சண்முகம் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் சட்டத்திற்கு புறம்பாக 70 அடி முதல் 80 அடி ஆழம் வரை கிராவல் மண் வெட்டி எடுத்துள்ளதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்ததாகவும், இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் 12 வாரங்களுக்குள் சட்டப்படி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் ,

அதன்படி 02/07/2025 அன்று புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்குமாறு தனக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டதாகவும், அதன்படி இன்று விசாரணைக்கு ஆஜராகனாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சட்டத்திற்கு புறம்பான முறையில் அனுமதி பெறாமல் கிராவல் மண் எடுத்து விற்பனை செய்து வரும் நபர்கள் மீது ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.





