விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட விஜயலட்சுமி காலனியில் சிலர் வீடு, வீடாக சென்று ரேஷன் அரிசி வாங்கி பதுக்கி வைத்திருப்பதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தொடர்ந்து புகார் வந்தது. அதன் பேரில் சிவகாசி வட்ட அலுவலர் கோதண்டராமன், குடும்ப பொருள் வழங்கல், தனி வருவாய் ஆய்வாளர் ஜாய் ஜெனரான் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தினார்கள்.
அப்போது ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த ஒன்றை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு வைத்திருந்தவர்கள் யார் என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கில் ஒப்படைக்கப்பட்டது.
