ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தும் தற்போது வரை குற்றவாளியை கைது செய்யவில்லை என்று தேனி மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடமும் ஆண்டிப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ள பெற்றோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் குற்றவாளிக்கு ஆதரவாக உரிய நடவடிக்கை எடுக்க மறுக்கும் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் காயத்ரி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள கோவில்பாறை மலை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் , ஷர்மிளா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில்.
இவர்களது மகளான 11 வயதான ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமியை எதிர்வீட்டில் வசிக்கும் முத்தையா என்ற 52 வயதான நபர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமி அவரது பெற்றோரிடம் கூறி பெற்றோர்கள் நேரில் சென்று சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்டபோது சிறுமியின் தந்தையை தவறு செய்த நபர் உறவினர் உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து கொண்டு அடித்ததாகவும் அடித்ததில் காயம் ஏற்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமியின் தந்தை சிகிச்சை பெற்றதாகவும் கூறும் பெற்றோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை கைது செய்யக்கோரி ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு மட்டும் செய்து சம்பந்தப்பட்ட நபரை இதுவரை கைது செய்யவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தது மட்டுமின்றி, இதனை தட்டிக்கேட்ட சிறுமியின் தந்தையையும் தாக்கியதாக வேதனை தெரிவித்துள்ள குடும்பத்தினர் இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்ததோடு, ஆண்டிப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் புகார் மனு அளித்து உடனடியாக சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த நபரை கைது செய்வதோடு, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க மறுக்கும் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் காயத்ரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கைது செய்யா பட்சத்தில் உறவினர்களை அழைத்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் பாதிக்கபட்ட சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.