• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார்..,

கடந்த 24 ஆம் தேதி குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன் பேட்டை பகுதியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற லட்சுமிகாந்தன் உறவினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த முருகவேல் என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு,அது மோதலாக மாறி உள்ளது.

இந்த நிலையில் இரண்டு தரப்பினரும் கடலூர் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் முருகவேல் என்பவரை சிலர் கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த நிலையில் முருகவேல் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாகவும், இது தொடர்பாக புகார் அளித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், முருகவேல் தரப்பினர் மற்றும் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்ட முயன்றனர்,

அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினால் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எடுக்கப்படும் என கூறியதைத் தொடர்ந்து அவர்கள் கலந்து சென்றனர்.