• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மக்கள் குறைகளை கேட்டறிந்த வேலூர் மாநகராட்சி ஆணையாளர்

Byமதன்

Jan 11, 2022

வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டலம் வார்டு 16 காகிதப்பட்டறை முத்து நகர் பகுதியில் ஆணையாளர் ஆய்வு செய்தார்.அங்குள்ள பொதுமக்கள் பெரிய பள்ளமாக இருப்பதால் மழை நீர் தேங்கி உள்ளது இதனால் பல நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட உள்ளன என்று ஆணையரிடம் முறையிட்டனர்.

வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை பலவிதமான நோய்கள் ஏற்படுகிறது அதுவும் கொடிய நோயான காலத்தில் இப்படி உள்ளது. எனவே இதை சரி செய்து தரும்படி கேட்டுக் கொண்டனர். ஆணையாளர் இளநிலை பொறியாளர் மதிவாணனிடம் ஜேசிபி வைத்து செய்து சரி செய்து தரும்படி உத்தரவிட்டார். உதவி ஆணையர் வசந்தி மற்றும் இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் உடனிருந்தனர்.