தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் நேற்றும் இன்றும் “வாருங்கள் கற்றுக் கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் செயல் விளக்கங்கள் நடைபெற்று நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தீ விபத்து தடுப்பு, தீயணைப்பு கருவிகளை கையாளுதல், குறித்த பயிற்சி சமையல் எரிவாயுவினை கையாளுதல் குறித்த பயிற்சி அதில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைப்பது மற்றும் தப்பித்துக் கொள்வது போன்ற பயிற்சிகளை பெரம்பலூர் மாவட்ட அலுவலர் அனுசுயா தலைமையில் செயல் விளக்கமாக நடத்தி காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து பழனிசாமி மற்றும் முன்னணித் தீயணைப்பாளர் இன்பராசன் தலைமையிலான குழுவினர் செய்து காண்பித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
