மியாவாக்கி வனத்தை உருவாக்க ஒரே நேரத்தில் 2000 மரக்கன்றுகள் நட்டு கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகள் அசத்தினர்.
கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மற்றும் சிறுதுளி ஆகியோர் இணைந்து சுமார் 2000 த்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வனம் எனும் மியாவாக்கி முறையில் பி எம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்தில் நட்டனர்.
கோவையில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மற்றும் சிறுதுளி அமைப்பு ஆகியோர் இணைந்து பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

கிருஷ்ணம்மாள் மகளிர்கல்லூரியின் நிறுவனர் தெய்வத்திரு சந்திரகாந்தி அம்மாவின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னதாக ,விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி செயலாளர் யசோதா தேவி வரவேற்று பேசினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் சேர் பெர்சன் நந்தினி ரங்கசாமி ,சிறுதுளி அமைப்பு நிறுவனர் வனிதா மோகன் ஆகியோர் கலந்து கொண்டு மரம் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினர்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தில், வனம் என்ற பெயரில் மியாவாக்கி முறையில் 2200 மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பள்ளி மற்றும் கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகள் இணைந்து சுமார் 2000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.

இது குறித்து சிறப்பு விருந்தினர்கள் கூறுகையில், இளம் தலைமுறையினருக்கு மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து தெரிந்து கொள்ளவும், அழிந்து வரும் இயற்கை சூழ்நிலைகளை பாதுகாப்பது மாணவ,மாணவிகளின் கடமை என்பதை வலியுறுத்தும் விதமாக இதி போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதாக தெரிவித்தனர்.
குறிப்பாக இங்கே நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகள் மரமாகும் வரை மூன்று வருடத்திற்குப் பராமரிக்க இருப்பதாகவும், இதற்காகச் சொட்டுநீர் பாசன வசதி ஏற்படுத்தி மரக்கன்றுகளை முறையாகப் பராமரிக்க உள்ளனர்.
இதற்குரிய செலவினை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி நிர்வாகமும் பேராசிரியர்களும், மாணவியர்களும் நன்கொடையாக வழங்கி இருப்பதாக தெரிவித்தனர்.