விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை கலெக்டர் சுகபுத்ரா வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்ற போது
வெம்பக்கோட்டை ஒன்றியம் கொங்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் என்ற மாற்றுத்திறனாளி மோட்டார் சைக்கிள் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்திருந்தார் . கொங்கன்குளம் கிராமத்திற்கு மாற்றுத்திறனாளி பாண்டீஸ்வரன் வீட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்டு கலெக்டர் சுகபுத்ரா உடனடியாக மோட்டார் சைக்கிள் வழங்க ஆணை வழங்கினார். சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய பாண்டியன், ஆகியோர் உடன் இருந்தனர்.








