இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரி, ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் தினம் வருகைதரும் இடம்.
கன்னியாகுமரி இயற்கை அமைப்பில் மூன்று கடல்கள் சந்திக்கும் இடம் என்பது இயற்கையின் அமைப்பு. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு மொழி, கலாச்சாரம், நாகரீகம் கொண்ட மக்கள் கூடும் இடமாகவும் கன்னியாகுமரி இருப்பது ஒரு அதிசயமான ஒற்றுமை..
இயற்கையின் மற்றொரு அற்புதமாக. சூரிய உதயம்,அஸ்தமனத்தை காணும் இடமாக குமரி முனை உள்ளது.
கன்னியாகுமரி வரும் மக்களின் கனவாக இருப்பது. கடலில் படகில் பயணப்பட்டு சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம்,வான் தொட உயர்ந்தது நிற்கும் உலக பொதுமறை தந்த திருவள்ளுவர் சிலையையும் அருகில் நின்று காணவேண்டும் என்பதே.
தமிழகத்தில் எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது, அன்றைய தமிழக ஆளுநர் பிரபுதாஸ்பட்வாரியால் திருவள்ளுவர் சிலை பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பணிகள் தொடங்கிய வேகத்தில் தொடராது இடை,இடையே தடைப்பட்டு13_ ஆண்டுகளுக்கு பின் புத்தாயிரமாவது ஆண்டில் (2000)ல் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலையை. கரையில் விழா நடைபெற்ற மேடையில் இருந்து திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தமிழ் சான்றோர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் பிரமாண்டமான பந்தலில் மூன்று நாட்கள் விழா நடைபெற்றது. தமிழகத்தின் அப்போதைய முதல்வர் கருணாநிதி மூன்று நாட்கள் இந்த விழாவிற்காக கன்னியாகுமரியிலே தங்கியிருந்தது. திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிற்கு முதல்வர் கருணாநிதி கொடுத அதி முக்கியத்துவத்தின் அடையாளம் என உலக தமிழர்களால் அன்று பார்க்கப்பட்டது.

கடலில் இரண்டு பாறைகளும் அருகருகே இருந்தாலும். இரண்டு பாறைகளுக்கு இடையே கடலின் நீர் பரபரப்பில் இருந்த அடர் பாறைகளால், கடலின் நீர் மட்டம் குறைவாக இருக்கும் நாட்களில். திருவள்ளுவர் சிலை பாறைக்கு படகு போக்குவரத்து தடைப்பட்டது. ஆண்டில் 100_நாட்கள் திருவள்ளுவர் சிலை பாறைக்கு படகு போக்குவரத்து நடந்தால் அது அந்த ஆண்டின் அதிசயமாக சுற்றுலா பயணிகள் பார்த்தார்கள்.
திருவள்ளுவர் சிலை 2000_ஆண்டு திறப்பு விழா மட்டுமே தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது. அதன்பின் கடந்த 24_ஆண்டுகளாக, குமரியில் உள்ள திருவள்ளுவர் பெயரால் இயங்கும் அமைப்புக்கள், தமிழ் ஆர்வலர்கள் அமைப்பு மற்றும் பல் வேறு சமூக அமைப்புகளே திருவள்ளுவர் சிலை திறப்பு நாளில் விழா எடுக்கிறது.
இன்னும் 5_மாதங்களில் பிறக்க போகும் ஆங்கில புத்தாண்டு. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறப்பின் 25_ஆண்டு என்பதை அடையாளமாக கொண்டு தமிழக அரசு திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்வை அரசு விழாவாக சிறப்பிக்க வேண்டும் என்ற குரல் பல்வேறு சமூக அமைப்புகளின் மத்தியில் இருந்து எழுந்து வருகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனை படி. திருவள்ளுவர் சிலை பாறை, சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே உள்ள கடல் பரப்பில் பாலம் அமைக்க ரூ.37.00 கோடி நிதி மதிப்பீட்டில்.கடந்த 08.03.22யில் ஒப்பந்தம் அழைப்பு கோரப்பட்டு,08.06.22 ஒப்பந்தங்கள் பெறப்பட்டு.15.02. 23ல் பாலத்தின் அடிப்படை பணிகள் தொடங்கி தொடருந்து தடையின்றி நடைபெற்று வருகிறது.

கடலில் இரண்டு பாறைகளுக்கு இடையே 77_மீட்டர் நீளம்,10_மீட்டர் அகலம்,கடல் மட்டத்தில் இருந்து அதிக பட்ச உயரம் 7மீட்டர் உயரத்தில் பலம் அமைக்கப்பட்டுள்ளது.
கடலில் உப்பு தன்மை பாதிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு இரும்பு தூண்களில் கண்ணாடி இழை பாலத்தின் பணிகள் மிக விரைவில் நிறைவடைய இருக்கும் சூழலில். குமரி ஆட்சியர் அழகுமீனா,இ.ஆ.பா நேற்று (ஆகஸ்ட் 22) ம் நாள் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உடன் திருவள்ளுவர் சிலை கடல் பரப்பில் நடக்கும் பாலத்தின் பணிகளை ஆய்வு செய்தார்.
பாலத்தின் பணிகள் இன்னும் ஒரு மாதத்திற்குள், இரண்டு பாறைகளுக்கு இடையே உள்ள கண்ணாடி இழை பாலம் விரைவில் திறக்கப்படும் நிலையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
