கோவை, மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் காந்திபுரம், சிவானந்தா காலனி, சாய்பாபா காலனி, உக்கடம், ராமநாதபுரம், ராம் நகர் சிங்காநல்லூர் போன்ற பகுதிகளில் பகலில் வெடி சத்தம் மற்றும் புகை மண்டலமாக இருந்த நிலையில், இரவை பகலாக்கும் விதமாக வானவேடிக்கைகள் ஆங்காங்கே வெடிக்கப்பட்டதால், வானம் வண்ணமயமாக காட்சி அளித்தது.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மாடியில் சென்று பல வகையான பூந்தொட்டிகள், மத்தாப்புகள், பல்வேறு வடிவங்களில் வானில் சென்று வெடிக்கும் பல வண்ண வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டது, கம்போரின் கண்களை வெகுவாக கவரச் செய்தது ..