கோவை மேற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பையா கவுண்டர்(எ) கிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக – வின் கோவை மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளரான பையா கவுண்டர்(எ) கிருஷ்ணன் காளப்பட்டி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு கொண்டுள்ளார்.

அவரை மீட்டு தனியார் கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 65. இந்நிலையில் அவரது தற்கொலை குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
இவர் காளப்பட்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் என்பதும் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர் என்பதும் இவரது கட்சி பதவி கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பறிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார்.




