• Fri. May 3rd, 2024

கோவை எஸ்டிபிஐ கட்சியினர் கோவையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

BySeenu

Feb 16, 2024

டெல்லியில் வாழ்வுரிமைக்காக போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் எஸ் டி பி ஐ கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை ஒட்டி கோவை ரயில் நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. முன்புறம் பேரிகாடுகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ரயில் மறியல் போராட்டத்திற்கு பிறகு எஸ் டி பி ஐ கட்சியின் மாவட்ட செயலாளர் முஸ்தபா பேசுகையில்..,
தலைநகர் டெல்லியில் கடந்த 12ஆம் தேதி முதல் இன்று வரை விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் விலை பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அதேபோன்று கடந்த 2021-22 ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். கடந்த ஆண்டு போராட்டத்தின் போது விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். மத்திய பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடனை வாரி வழங்குகிறது. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். கடந்த போராட்டத்தின் போது மத்திய அமைச்சர் மகன் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் இன்று வரை மத்திய அரசு ஒரு சிறு நடவடிக்கை எதூம் எடுக்கவில்லை – நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை மத்திய அரசு தாக்குதல் நடத்துகிறது என எஸ் டி பி ஐ கட்சியின் மாவட்ட செயலாளர் முஸ்தபா பேட்டி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *