• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இரண்டு புரோக்கர்களை, கோவை தனிப்படை போலீசார் கைது…

BySeenu

Sep 8, 2024

வாட்ஸ் அப் குழு ஏற்படுத்தி, வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இரண்டு புரோக்கர்களை, கோவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ரஷ்யா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 15 அழகிகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக வடக்கு துணை ஆணையர் ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவை மாநகரில் நட்சத்திர ஹோட்டல்களில் வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக, கோவை மாநகர காவல் துறைக்கு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து விசாரணையில் களமிறங்கிய கோவை தனிப்படை காவல்துறையினர், சிக்கந்தர் பாதுஷா, ஸ்டீபன் ராஜ் என்ற இரண்டு ஏஜென்ட்களை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்தியா முழுவதும் whatsapp குழு ஏற்படுத்தி, 117 ஏஜென்ட்கள் மூலம் விபச்சார தொழில் செய்வது தெரியவந்தது. கோவையில் உள்ள முக்கியமான 8 நட்சத்திர ஹோட்டல்களில் ,நீண்ட நாட்கள் தங்கி இருந்தவர்கள் மற்றும் வந்து சென்றவர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ரஷ்யா இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த, விபச்சாரத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். whatsapp குழு மூலம் விபச்சாரத் தொழில் செய்த நபர்களிடமிருந்து சிம்கார்டுகள், செல்போன்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் whatsapp மூலமாக விபச்சாரத் தொழிலை, வெளிநாட்டு பெண்களை வைத்து செய்து வந்த கபீர் சிங் என்ற முக்கிய குற்றவாளியை தேடி வருவதாக, வடக்கு துணை ஆணையர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் இந்தியா முழுவதும் ஏஜென்ட்களாக செயல்பட்டு வரும் 117 நபர்களை பிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.