கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உக்கடம் புல்லுக்காடு பகுதியில் நாய் கருத்தடைப்பு மையம் செயல்பட்டு வருகிறது.கோவை மாநகராட்சி நிர்வகிக்கும் இந்த கருத்தடை மையத்தில் கோவை மாநகராட்சி பகுதிகளில் உலாவி வருகின்ற தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கோவை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பிடிபடும் தெரு நாய்கள், கருத்தடை செய்து இதே பகுதியில் விடுவதாகவும் இதனால் பொதுமக்கள் நாய் கடிக்கு உள்ளவதாகவும்,உடனடியாக கருத்தடை மையத்தை மாற்ற கோரி எஸ் டி பி ஐ கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர் அலிமா உசேன் மாநகராட்சி வளாகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாய் கடிக்கு உல்லாவது போல் கையில் ரத்த கரையுடன் கட்டுபோட்டு, பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.மாநகராட்சி பகுதியில் உள்ள இந்த நாய்கள் கருத்தடை மையத்தை இடமாற்ற செய்ய வேண்டும் என கோரிக்கை கவுன்சிலர் அலிமா உசேன் கோரிக்கை விடுத்துள்ளார்.
