• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவை ஜே. சி. டி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற பத்தாவது பட்டமளிப்பு விழா..!

BySeenu

Jan 21, 2024

கோவை ஜே. சி. டி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற பத்தாவது பட்டமளிப்பு விழாவில், அண்ணா பல்கலைக்கழகத்தின் தரவரிசையில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்ற மாணவி உட்பட 300 க்கும் மேற்பட்டோர் பட்டம் பெற்றனர்.

கோவை, பிச்சனூரில் உள்ள ஜே .சி. டி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் பத்தாவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.. கல்லூரி முதல்வர் முனைவர் சு. மனோகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில்,திருச்சி இந்திய தகவல் தொழில்நுட்ப கழக இயக்குனர் முனைவர் என்.வி எஸ்.நரசிம்ஹ சர்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாப் பேருரை ஆற்றினார்.இதில் ஃபுட் டெக்னாலஜி மாணவி ஷெர்லி அண்ணா பல்கலைக்கழகத்தின் தரவரிசையில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்…மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தரவரிசையில் பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் மாணவர் ஆஸ்ரே. இரண்டாம் இடமும், ஃபுட் டெக்னாலஜி மாணவிகள் சினேகா வாசுதேவன் மற்றும் அருந்ததி ஷாபு ஆகியோர் மூன்று மற்றும் ஆறாம் இடம் பிடித்து கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நரசிம்ஹ சர்மா தமது உரையில், இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்குவது தொழில்நுட்பம் பயின்ற இளைஞர்களின் கையில் தான் உள்ளது என்று குறிப்பிட்டார். மக்களின் அன்றாடத் தேவைகளைக் கண்டறிந்து,புதிய உத்திகளுடன் அவற்றை தயாரிக்கும் தொழில் முனைவோராக பட்டதாரிகள் உருவாக வேண்டும் என ஊக்குவித்த அவர்,. மாணவ,மாணவிகள் வாழ்நாள் முழுவதும் கல்வியைத் தொடரவும், ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். இவ்விழாவில்,கல்லூரி நிர்வாகத்தினர் அனைத்துத் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலையில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் மற்றும் தொழில் நுட்பப்பட்டங்களைப் பெற்றனர்.