• Sun. May 5th, 2024

கோவையில் கிட்ஸ் ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி..,

BySeenu

Jan 21, 2024

கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி எஸ் என் எஸ் கல்வி நிறுவனம், கோயம்புத்தூர் ரோட்டரி இன்டஸ்ட்ரியல் சிட்டி சார்பாக கோவையில் கிட்ஸ் ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.. இதில் சிறுவர், சிறுமியர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபித்தனர்.

கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி,எஸ்.என்.எஸ்.கல்லூரி மற்றும் ரோட்டரி கிளப் இண்டஸ்ட்ரியல் சிட்டி உட்பட பல்வேறு அமைப்பினர் இணைந்து 4 வது கிட்ஸ் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள் நேரு ஸ்டேடிய வளாகத்தில் நடைபெற்றது.முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில், அகாடமியின் தலைவர் பரசுராமன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ரொட்டேரியன் கவர்னர் மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளர்களாக ஜி.எஸ்.டி உதவி ஆணையர் டோலா தி்ருப்பதி,கொடிசியா முன்னால் தலைவர் முத்துசாமி, வழக்கறிஞர் பிரபு சங்கர், மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா, எஸ்.என்.எஸ்.அகாடமி முதல்வர் ஸ்ரீ வித்யா, மனிதநேயன், சந்தோஷ் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் நடைபெற்ற இதில் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் தனியார் கிளப் சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கோவை வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு, 6, 8, 10 மற்றும் 12 வயது பிரிவுகளின் அடிப்படையில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தொடர் ஓட்டம், சாப்ட் பால் எறிதல், தடை ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றி்தழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், ஸ்ரீதர், ஜோஷ்வா செல்லத்துரை, பயிற்சியாளர்கள் அருள் மெர்சல், சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *