• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உலகின் 20 விமான நிலையங்களில் கோவை இடம் பிடித்துள்ளது

ByA.Tamilselvan

Jan 12, 2023

நேரம் தவறாத உலகின் 20 விமான நிலையங்களில் கோவை இடம் பிடித்துள்ளது. உலகளவில் நேரந்தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் பற்றிய பட்டியலை ‘அபீஷியல் ஏர்லைன் கைட்ஸ்’ எனப்படும் ‘ஓஏஜி’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலக பயண தகவல்களை வெளியிடும் இந்நிறுவனம், நேரந்தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள் பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி, முதல் 20 விமான நிலையங்கள் பட்டியலில் தமிழ்நாட்டின் கோவை விமான நிலையம் இடம்பெற்றுள்ளது. இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படும் இந்த விமான நிலையம், 13-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ஜப்பானின் ஒசாகா சர்வதேச விமான நிலையம் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. நேரந்தவறாத விமான நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ‘இண்டிகோ’, 15-வது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் இந்தோனேசியாவின் கருடா இந்தோனேசியா விமான நிறுவனம் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. நேரந்தவறாத விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து கோவை விமான நிலையமும், இண்டிகோ விமான நிறுவனமும் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.