• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவை ராம் நகர் பகுதியில் கோவை மாநகர் மாவட்ட இந்து வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் அறிமுக கூட்டம்

BySeenu

Jun 23, 2024

கோவை ராம் நகர் பகுதியில் கோவை மாநகர் மாவட்ட இந்து வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் அறிமுக கூட்டம் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்த இணைப்பு விழா மற்றும் அறிமுக கூட்டத்திற்கு சுமார் 200க்கும் மேற்பட்ட இந்து முன்னணி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கோவை மாநகரில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரன் தலைமையில் இந்து வியாபாரிகள் நலச்சங்கம் என்ற சங்கம் துவங்க பட்டது. இந்த சங்கம் எழுச்சியோடு நடந்து வருகிறது. நியாமான முறை நடைபெற்று வருகிறது.
இதில் செய்யக்கூடிய வியாபாரங்கள் அனைத்தும் சுதேசி பொருட்கள்.ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பள்ளி கூட்டங்களில் பொட்டு வைக்க கூடாது என அறிக்கை கொடுத்து உள்ளார் . அவர் ஒரு நக்சலைட் போல செயல்படுகிறார். என்று கூறிய காடேஸ்வரன்
சிலுவை தொப்பி பர்தா என சொல்ல வில்லை. கோவை முஸ்லிம் தாயது கட்டு வருகிறது இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறினார். கோவை மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தில் போதை பொருள் அதிகமாக உள்ளது.போதைப் பொருளில் கோடி கணக்கான ரூபாய் வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை நெடு காலமாக நடந்து வருகிறது .தமிழக அரசை மக்கள் கண்டிக்க வேண்டும் .பாடம் புகட்ட வேண்டும் நெல்லை மாவட்டத்தில் தேர் இழுக்கிறார்கள். தேரின் உடைய அனைத்து இடங்களையும் ஆய்வு செய்திருக்க வேண்டும்..அந்த கயிறு பலம் இல்லாமல் அறுந்து போகிறது.இதற்குக் காரணமான அற நிலை துறை அமைச்சர் மீது வன்மையாக கண்டிக்கிறோம் கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் கொடுத்து உள்ளார்கள் . பத்து லட்சம் கொடுத்தால் போதுமா அவர்களுடைய வாழ்வாதாரத்தை எப்படி மேம்படுத்துவது என்பதை அரசு சிந்திக்க வேண்டும் என்று கூறினார்.