• Mon. Jan 5th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

டெல்லியில் காற்று மாசு-பள்ளிகள் மூடல்

Byகாயத்ரி

Nov 17, 2021

தலைநகர் டில்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளது. டில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பிராந்தியங்களில், தேவையற்ற பயிர்க்கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையாலும் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, டில்லி காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேவைப்பட்டால், காற்று மாசை தடுக்க முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளுங்கள் என டில்லி அரசுக்கு உத்தரவிட்டது. இதை அடுத்து, டில்லியில் உள்ள பள்ளிகள் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாகவும், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணிபுரிவில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்றும், கட்டுமானப் பணிகளுக்கு தடை விதித்தும் டில்லி அரசு உத்தவிட்டது. மேலும், முழு ஊரடங்கை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும் அரசு தெரிவித்தது.

அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களில் பாதி பேரை வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டில்லியில் காற்று தர குறியீடு இன்று 379 ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.