அரியலூர் அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்களுக்கு, கட்டிட பொறியாளர்கள் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு, தீபாவளி பண்டிகை முன்னிட்டு, அரியலூர் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில், இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் பொறியாளர் தியாக. அறிவானந்தம் தலைமையில் சங்க செயலாளர் பொறியாளர் பி.நாகமுத்து, பொருளாளர் பொறியாளர் கார்த்திக் ஆகியோர் அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் மற்றும் பலகாரம் வழங்கப்பட்டது.

