கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் கட்டட பொறியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்ட கட்டட பொறியாளர் சங்கத்தின் சார்பாக, வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கட்டுமான பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்தும், P. சாண்ட், M. சாண்ட், ஜல்லி ஆகிய பொருள்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 100% உயர்ந்துள்ளதைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.
கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தால் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க முடியாமல் அவதிப்படுவதாகவும், தமிழக அரசு உடனடியாக கட்டுமான பொருட்களை கடுமையான விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக ஒழுங்குமுறை ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.