• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நகர மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் சாக்கடையில் தூர்வாரிய அவலம்…

ByS. அருண்

Feb 19, 2025

துறையூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 3 வது வார்டு பகுதியில் கழிவு நீர் சாக்கடையை தூர்வாராததால் திமுக நகர மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் சாக்கடையில் தூர்வாரிய அவலம்.

திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்குட்பட்ட மூன்றாவது வார்டு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இப்பகுதிகளில் தொடர்ந்து கழிவுநீர் செல்லும் சாக்கடையை தூர்வாறாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக 3 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் (திமுக‌) கார்த்திகேயன் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா விடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகிறார், தொடர்ந்து நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை மூன்றாவது வார்டு பகுதிகளில் சென்று மக்களிடம் வரி பணம் கேட்டு வசூல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் இதனால் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியை மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டி மூன்றாவது வார்டு பகுதிகளில் உள்ள கழிவு நீர் சாக்கடை கால்வாயில் நகர் மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தானே கழிவு நீரில் இறங்கி கால்வாயை தூர்வாரினார்.

இது குறித்து கார்த்திகேயன் கூறுகையில்..,
இதனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கழிவு நீர் செல்லும் கால்வாயை தூர் வாராமலும் அப்பகுதிகளில் குப்பைகளை எடுக்காமலும் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் கூறியதாகவும், நகர்மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் நகராட்சி ஆணையரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று தானே அப்பகுதிகளில் உள்ள கழிவுகளை அகற்றியதாக திமுக நகர மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கூறினார்,

துறையூர் நகராட்சி பகுதியில் திமுக நகர மன்ற உறுப்பினர் பகுதியில் இது போன்ற நிலை இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர், தொடர்ந்து துறையூர் நகராட்சி நிர்வாகம் அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.