• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சுமார் 77 கோடி திட்ட மதிப்பில் சுற்றுவட்ட சாலை.., அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைப்பு…

ByG.Suresh

Nov 19, 2023

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் 77 கோடி திட்ட மதிப்பில் அமைக்கப்படவுள்ள சுற்றுவட்ட சாலைக்கான பணியினை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

சிவகங்கையில் நகர்த்திற்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்கவும் தஞ்சாவூர், மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையை இனைக்கும் விதமாகவும் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் 77.14 கோடி திட்ட மதிப்பில் காஞ்சிரங்காலில் இருந்து துவங்கி கண்டனி வரை 10.6 கி.மீ தூரமுள்ள சுற்றுவட்ட சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டு அதற்கு அன்மையில் மாநில அரசு ஒப்புதலும் அளித்த நிலையில் அதற்கான பணி இன்று சிவகஙகை காஞ்சிரங்காலில் துவங்கியது. இதனை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் ஆட்சியர் ஆஷா அஜித் ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்தனர். இந்த விழாவில் பேசிய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்குவது, பொருளாதாரத்தை உயர்த்துவது மட்டுமல்ல அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதும் இந்த அரசின் முக்கிய செயல்பாடாகும் என பேசினார். இதில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் துவங்கிவைத்தனர்.