விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கங்கர் சேவல் கிராமத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் ரூபாய் மூன்று கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு உடைய புதிய வட்ட செயல்முறை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.

அதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி, குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார் .தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக துணை, மண்டல மேலாளர் ஆதிலட்சுமி திமுக வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய
செயலாளர் ஜெய பண்டியன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.