தமிழ் நாடு ஜனநாயக ஐக்கிய கிறிஸ்துமஸ் விழா, தக்கலை எலிசியா தேவாலாய முற்றத்தில் பெரும் விழாவாக நடைபெற்றது.
தமிழ் நாடு ஐக்கிய ஜனநாயக அமைப்பின் தலைவர் அருட்பணி ஜார்ஜ் பொன்னையா தலைமையில். தக்கலை எலிசியார் ஆலைய வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிற்கு தக்கலை உயர் மறைமாவட்ட ஆயர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அருட் பணி ஜெகத் கஸ்பர், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், தாரகை கத்பட், அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம் ஆகியோர் விழாவை காண வந்தவர்களுக்கு இறை இயேசு பிறப்பின் நல் வாழ்த்தகளை தெரிவித்தனர்.



எலிசியார் ஆலைய வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் 300_க்கும் அதிகமான பேர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்ட அருட்பணி ஜெகத் கஸ்பர் அவரது அருள் உறையில் கிறிஸ்தவ மிஷனரிகளின் வருகை இந்தியாவில் மக்கள் மத்தியில் அனைவருக்கும் கல்வி, ஒவ்வொரு தனி மனிதனின் உடல் நலம் காக்கும் மருத்துவ உதவி இவற்றை ஒரு மக்களின் சேவையை,மதவேற்றுமை பார்க்காது மனித நேயம் போற்றும் பணியையே கடமையாக, இறை இயேசு சொன்ன உன்னைப் போல் உன் அயலானையும் நேசி என்றுறைத்த வார்த்தையை மனித சமுகம் காக்கும் பெரும் பணி இன்று தொடர்வது, கிறிஸ்தவ மறை உள்ள காலம் வரை குன்றாத, குறையாத பணியாக தொடரும் என தெரிவித்தார்.