திருப்பரங்குன்றம், டிச.18- திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலையில் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் பெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தலைமையில் பசுமலையில் நேற்று கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. விழாவில் அதிமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் விக்டர் பிரபாகரன் போதகர் ஜாஸ்வா விஜயகுமார் நிர்வாகிகள் டேனியல் அமர்சிங் ஆலன் பீட்டர்சன், சுதாகர் பாண்டியன் ரிச்சர்ட்,சீலா பாலகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் இயேசு கிறிஸ்து குடில் முன்பு பாடல்கள் பாடப்பட்டன தொடர்ந்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியின் பங்கேற்ற கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி பொருத்தவரை கிறிஸ்தவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம். மேலும் அவரது கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது ஆண்டுதோறும் எனது வீட்டில் குடில் அமைத்து கிறிஸ்துவவிழா கொண்டாடி வருகிறோம். அது போல இந்த ஆண்டும் சிறப்பாக விழா நடைபெற்றது என அவர் தெரிவித்தார்.




