• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவையில் கிறிஸ்துமஸ் கேரல் பாடல் நிகழ்ச்சி..,

BySeenu

Nov 27, 2023

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகையின், மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு சேர்ப்பது கேரல் என்று கூறப்படும் கிறிஸ்துமஸ் பாடல்கள்தான். தேவாலயங்கள் மட்டுமின்றி பலவேறு பொது இடங்களிலும் கிறிஸ்துமஸ் கேரல் பாடல்கள் பாடுவது தற்போது வழக்கமாகி உள்ளது. இந்நிலையில் கோவையில் பழைமை வாய்ந்த ஒய்.எம்.சி.ஏ.சார்பாக ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவ கேரல் பாடல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் ஒண்பதாவது ஆண்டாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் உள்ள சுமார் பதினைந்து கேரல் குழுவினர் கலந்து கொண்டனர்.. பல்வேறு வண்ணங்களில் ஆடை அணிந்த மாணவ,மாணவிகள் கிறிஸ்துமஸ் கேரல் பாடல்களை மேடையில் பாடி அசத்தினர். மேற்கத்திய இசைக்கருவிகளான, கீபோர்ட், டிரம்ஸ், கித்தார் உள்ளிட்ட வெவ்வேறு இசைக்கருவிகளை இசைத்தவாறு கிறிஸ்துமஸ் பாடல்களை பாடியதை பார்வையாளர்கள் கைகளை தட்டி உற்சாகபடுத்தினர். இதில் கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவ ஆலய கேரல் குழுவினர் கல்லூரி மாணவ, மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் ஒய்.எம்.சி.ஏ.நிர்வாகத்தின் தலைவர் ஜெயகுமார் டேவிட் மற்றும் செயலாளர் சாக்ரட்டீஸ், துணை தலைவர் தேவராஜ் சாமுவேல், பொருளாளர் ஆர்ம்ஸ்ட்ராங் இம்மானுவேல் உட்பட நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தென்னிந்திய திருச்சபை கோவை திருமண்டலத்தின் உப தலைவர் ஆயர் டேவிட் பர்ணாபஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.