இந்தியாவில் ஏற்கனவே மணிப்பூர் கலவரத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் 200_க்கு மேல் இடிக்கப்பட்டது. இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி பொது வெளியில் ஊர்வலமாக அழைத்து சென்றதை இதுவரை கண்டுக்கொள்ளாத மத்திய அரசும், பிரதமரும் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை தீர்வு காணாத நிலையில்.

சத்தீஸ்கார் மாநிலத்தில் பச்ரங்தளம் என்ற அமைப்பு கேரளாவைச் சேர்ந்த இரண்டு அருட் கன்னியர்கள்,சில மாணவிகளை கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்ய முயன்றாகள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறையில் அடைத்துள்ளதுடன், சிறையில் தரையில் படுக்கவைத்திருப்பதை கண்டித்து மக்களவையில் கேரள மாநிலத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டன கேள்விகளை எழுப்பி வரும் நிலையில்,
கேரளாவில் பல்வேறு கட்டப் போராட்டங்களை கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த அனைத்து பிரிவினரும், சத்தீஷ்கார் அரசுக்கும், மத்திய அரசுக்கும், திருச்சூர் நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய இணை அமைச்சர் முன்னாள் நடிகர் சுரேஷ் கோபிக்கும் எதிராக கடுமையான கண்டன ஊர்வலங்களை நடத்தி வரும் நிலையில்,

குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடலின் முன்னால் நேற்று மாலை (ஆகஸ்ட் 1)ம் நாள். குமரி கோட்டார் மறைமாவட்ட ஆயர் முனைவர் நசரேன் சூசை முன்னிலையில் குழித்துறை மறைமாவட்டம் ஆயர்
ஆல்பர்ட் ஆனஸ்தாஸ், தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன், ஆங்கிலிகன் திருச்சபை ஆயர் மரியோ ஜார்ஜ் பிரைட்,அருட் கன்னியர்கள், அருட்பணியாளர்கள் கிறிஸ்தவ சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள்,
சத்தீஷ்கார் அரசுக்கும், மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக
கண்டன கோசங்களுடன் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய
கோட்டார் மறைமாவட்ட ஆயர் முனைவர் நசரேன் சூசை.
‘சிலுவையை’ நாங்கள் உயிரின் பிணைப்பாக கருதி வருகிறோம். அமைதியும்,உலக
வாழ்வும் சிலுவையில் அடங்கியுள்ளது.

சத்தீஷ்கார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு சகோதரிகளின்
பின்னால் ‘இயேசுவின்’ திருவருள் உள்ளது என தெரிவித்தார்.
சத்தீஷ்கார் அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில். விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், மாநில உணவு பாதுகாப்பு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜான்,பசலியான் நசரேத் மற்றும் குமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து திரளாக வந்திருந்த கிறிஸ்தவர்கள் மோடி அரசுக்கு எதிராக கண்டன குரல் எழுப்பி கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.