• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா..,

ByAnandakumar

Apr 29, 2025

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்த புகழ்பெற்ற ஆலயமான புகழூர் நானப்பரப்பு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழாவில் காப்பு கட்டுதலை தொடர்ந்து 15 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சியான இன்று தீமிதி( பூக்குழி இறங்கும்) திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டியும், வேண்டுதல் நிறைவேறிய பிறகு குழந்தைகளுடன் தீமிதி திருவிழாவில் பங்கேற்றனர்.

நானபரப்பு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத தீமிதி ( பூக்குழி) திருவிழாவை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் உற்சவர் ஸ்ரீ மாரியம்மனை மேளதாளங்கள் முழங்க தோளில் சுமந்தவாறு ஆலயம் வரும் வழியில் பக்தர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கோவிலுக்கு வந்தனர்.

அதைத்தொடர்ந்து கோவில் பூசாரி சாமி ஆடியபடி பூக்குழி திருவிழாவை தொடங்கி வைத்த பிறகு ஆண்கள் மற்றும் பெண் பக்தர்கள் வெள்ளை நிறம் ஆடை அணிந்து ஓம் சக்தி பராசக்தி என்ற கோசத்துடன் தீமிதி ( பூக்குழி) திருவிழாவில் பங்கேற்றனர்.

நீண்ட நாட்களாக குழந்தை வரம் வேண்டி குழந்தை பெற்றவுடன் பக்தர்கள் தங்களது குழந்தைகள் தோளில் சுமந்தவாறு தீமிதி திருவிழாவில் பங்கேற்ற காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து சிறப்பித்தனர்.

அதை தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் ஆங்காங்கே அன்னதானமும், நீர்மோர், கம்மங்கூழ் உள்ளிட்ட பிரசாதமும் வழங்கப்பட்டது.

பின்னர் அனைவரும் ஆலயத்தில் சென்று மூலவர் ஸ்ரீ மாரியம்மனை தரிசித்து இல்லம் சென்றனர்.

கரூர் மாவட்டத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக வெயில் தாக்கம் உள்ள நிலையில் சரியாக 12.30 மணியளவில் கடும் வெயிலிலும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செய்தனர்.