• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

செல்லமுத்து மாரியம்மன் ஆலய சித்திரை பெருவிழா..,

ByR. Vijay

Apr 21, 2025

நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் பழமை வாய்ந்த அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சித்திரை பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைப்பெறும். அந்தவகையில் 24 நாட்கள் நடைப்பெறும் இந்த ஆண்டுக்கான சித்திரைப் பெருவிழா இன்று அம்பாளுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

தேவபுரிஸ்வரர் ஆலய குளக்கரையில் இருந்து மங்கள இசை வாத்தியங்கள் முழங்க 500 க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக பூத்தட்டுகளை ஏந்தி வந்தனர். தொடர்ந்து செல்லமுத்து மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மலர்களால் அபிஷேகம் நடைப்பெற்று மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்குவதற்காக காப்புக்கட்டிக் கொண்டனர். இரவு அம்மன் வீதி உலா காட்சி நடைப்பெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா வருகின்ற 28 ம் தேதி நடைப்பெற உள்ளது.