• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

ஆர்.எஸ்.புரத்தில் குழந்தைகளின் கலைத்திறனை வெளிப்படுத்தும் ஓவிய கண்காட்சி

BySeenu

Jan 23, 2024

ஆர்ட்டிஸ்டிக் கலைவகுப்புகளை நடத்தி வரும் திறன்மிக்க ஆசிதா ஜூவரி கற்பனையின் கலங்கரை விளக்கமாக 2007 முதல் திகழ்ந்து வருகிறார்.
புதுமை படைப்பில் கலங்கரை விளக்கமாக, கலைநயத்தின் வெளிப்பாடாக 2007 முதல் படைப்பாற்றல் பெற்ற ஆசிதா ஆர்ட்டிஸ்க் வகுப்புகளை நடத்தி வருகிறார்.
மாணவர்கள், தங்களது கலைபடைப்புகளை காட்சிப்படுத்த கண்காட்சிகளை வழக்கமாக நடத்தி வருகிறார். எல்லா இடங்களிலும் கலை ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக கலை சூழல் காட்சிப்படுத்தப்படுகிறது.

ஆஸ்திகா ஜூவாரி, ஆர்டிக்ஸ்டின் பின்பலமாக திகழ்கிறார். அவர், ஒரு சொல்லித்தருவதோடு மட்டுமின்றி, மாணவர்கள், தங்களது கலையின் ஆழத்தை உணரச் செய்யும் ஆலோசகராகவும் இருந்து வருகிறார். அனுபவமிக்க அவர், கலையின் மீது உள்ள காதலால், அனைவரையும் ஈர்க்கும் விதமான வகுப்புகளை நடத்தி வருகிறார்.
பாங்கிய சபா பரிஷத் அங்கீகாரத்துடன், கல்கத்தா பல்கலைக் கழகத்துடன் இணைந்து, மிக உயர்ந்த தரத்தினை பின்பற்றி வருகிறது. இந்த அங்கீகாரம், நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உயர்த்துவதோடு மட்டுமின்றி, மாணவர்கள் ஒருங்கிணைந்த கலை கல்வியை கற்கவும் வாய்ப்பாக அமையும். கலைப்படங்கள், ஓவியங்கள், ஊடகத்தோடு இணைந்த சிற்பங்கள், கலை அபிநயங்களை புரிந்து கொள்ளுதல் போன்றவை நான்கு வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படுகிறது.
வழக்கத்துக்கும் அப்பாற்பட்டு, மாணவர்களை எல்லையில்லா கற்பனைகளையும் புதுமைகளையும் படைக்க ஊக்கவிக்கிறது இந்த வகுப்புகள்.

பாங்கியா சபா பரிஷத் அங்கீகாரத்துடன், கலைப்பயணத்தை தொடர்வதோடு, கல்கத்தா பல்கலைக் கழகத்தின் தேர்வுகளையும் எழுதலாம். மாணவர்கள், கலைப்பயிற்சிகளை கற்பதோடு, கலைகளின் வரலாறு, கருத்துரைகள், அலசி ஆராய்தல், கலாச்சார சிந்தனைகளை விரிவாக புரிந்து கொண்டு அதன்படி பணியாற்றுதல் போன்றவைகளை கல்வியோடு கற்றுத்தருகிறது ஆர்டிஸ்டிக். இங்கு படித்து முடிப்பவர்கள், தங்கள் திறனை மேம்படுத்திக் கொண்டதோடு, கலையின் வலிமையையும் உணர்த்த முடியும்.உங்களது குழந்தைகளின் கலைத்திறனை வெளிக் கொணரவும், அந்த பயணத்தை தொடரவும், எங்களது கண்காட்சியை ஜனவரி 21 ல் பார்வையிடுங்கள். கோவை, ஆர்.எஸ்.புரத்தில் 16 ஏ வெங்கடாச்சலம் ரோட்டில் நடைபெற்றது. இந்த ஓவிய கண்காட்சியை பிரபல நகை வடிவமைப்பாளரும் பேஷன் டிசைனருமான அபர்ணா சுங், ஹோட்டல் கிராண்ட் ரீஜென்ட், இயக்குனர் திருமதி. சாந்தினி வி சௌத்ரி மற்றும் ஸ்போர்டி பீன்ஸ், நிர்வாக பங்குதாரர் திருமதி. மேக்னா கோனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கண்காட்சியை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.