

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்கள் அடங்கிய அலங்கார ஊர்திகள், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பார்வைக்காக வலம் வந்தன. இதன் முடிவில் சென்னை மெரினா கடற்கரையில் வரும் 23-ந் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு அலங்கார ஊர்திகள் வைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் இந்த அலங்கார ஊர்திகளை கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவ, மாணவிகள் இன்று அலங்கார ஊர்திகளை பார்வையிட்டனர். அப்போது அவ்வழியே வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காரில் இருந்து இறங்கி பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அலங்கார ஊர்திகளின் பின்னணியில் மாணவ, மாணவிகளுடன் முதலமைச்சர் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.இந்த காட்சியை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
