• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வீரதீர செயல் புரிந்த சாதனையாளர்களுக்கு குடியரசு தினவிழாவில் விருது வழங்கிய முதல்வர்

Byகாயத்ரி

Jan 26, 2022

73-வது குடியரசு தினவிழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றும்போது, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

கவர்னர் ஆர்.என்.ரவி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.இதையடுத்து டெல்லி அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்தி உள்பட 4 ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.அணிவகுப்பு ஊர்திகளில் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார், வ.உ.சி.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பெரியார், ராஜாஜி, காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன.

இதையடுத்து வீரதீர செயல் புரிந்த சாதனையாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார்.
உயிருக்கு போராடியவரை தோளில் தூக்கிச் சென்ற கீழ்ப்பாக்கம் ஆய்வாளர் ராஜேஸ்வரி,விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் வெள்ளத்தில் சிக்கிய நபர்களை மீட்ட தீயணைப்போர் ராஜீவ் காந்தி,திருவொற்றியூரில் கட்டிட விபத்தின்போது காப்பாற்றிய தனியரசு, கோவை வனக்கால்நடை உதவி மருத்துவர் அசோகன், மதுரை அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்ட கார் ஓட்டுநர் முத்துகிருஷ்ணன், திருச்சி மணப்பாறை அருகே நீரில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய சிறுவன் லோகித் மற்றும் திருப்பூரில் நீரில் மூழ்கிய சிறுமிகளை காப்பாற்றிய சொக்கநாதன், சுதா உள்ளிட்டோருக்கு வீரதீரச் செயல்களுக்காக அண்ணா பதக்கத்துடன் ரூ.1 லட்சம் காசோலையும் வழங்கப்பட்டது.