தமிழ்நாட்டில் உள்ள ஆயிரம் பிரச்சனைகளுக்கு ஒத்தி வைக்கும் தீர்மானத்தை கொடுத்துவிட்டு, தனது மகனை துணை முதல்வராக ஆக்கி விட வேண்டும் என துடியாய் துடிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசினார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் அதிமுக உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் பேரறிஞர் அண்ணா-வின் 115வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.,
இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.,
அண்ணாவின் சம தர்மத்தை, சுய மரியாதையை காற்றில் பறக்க விட்டுவிட்டு ஒரு குடும்ப ஆட்சியாக திமுக ஆட்சி என்று, இன்று செயலாற்றி கொண்டிருக்கிறார்கள்.,
சர்வாதிகார கட்சியாக திமுக உள்ளது, தோழமை கட்சி கூட வாய் திறக்க மறுக்கிறார்கள், மது ஒழிப்பு மாநாடு என சொல்கிறார்கள். ஆனால் அதில் ஆளும் கட்சியை பேச அழைக்கிறார்கள், எங்கே தனியாக சென்றுவிட்டால் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தவுடன், மு.க.ஸ்டாலின் யாரையும் அழைக்கவில்லை, திருமாவளவனை அழைத்து வாருங்கள், என்ன மதுவிலக்கு, பொது உடமை இயக்கம் பிறக்கும் போதே போராட்ட குணத்தோடு பிறந்தவர்கள் கூட இன்று போராட தயங்குகிற போது, இந்த தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக போராடும் ஒரே இயக்கம் அதிமுக.,
இங்கிலாந்து ஸ்காட்லாந்துக்கு நிகரான காவல்துறை என்ற பெயர் பெற்ற காவல்துறை,
தலைகுணிந்து நிற்கிறது. காவல்துறையை சுதந்திரமாக செயல்பட வைத்தால் சட்டம் ஒழுங்கை, போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க முடியும்.
அமெரிக்கா வரை சென்று வரும் முதல்வருக்கு கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களை சந்திக்க செல்லவில்லை அந்த மக்களை பார்த்து ஆறுதல் கூட சொல்ல வேண்டாமா.
அதிமுக என்ற மக்கள் இயக்கம் இருக்கும் வரை கள்ளர் சீரமைப்பு பள்ளி என்ற உரிமையை எந்த கொம்பனாலும் தொட்டு கூட பார்க்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், அதை ஒத்தி வைத்துவிட்டு, நாட்டில் உள்ள பிரச்சனைக்கு எல்லாம் ஒத்தி வைக்கும் தீர்மானத்தை கொடுத்துவிட்டு, தனது மகனை துணை முதல்வராக ஆக்கி விட வேண்டும் என துடியாய் துடிக்கிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என பேசினார்.








