தளவாய் சுந்தரத்திற்கு வெற்றியா.? எடப்பாடி பழனிச்சாமி எடுத்த கட்சி பதவிகளை திரும்ப கொடுத்ததின் சிதம்பர ரகசியம்.!?
அதிமுகவில் குமரி எம்.எல்.ஏ தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அக்.6 இல் ஈசாத்திமங்கலம் பகுதியில் நடந்த ஆர்.எஸ்.எஸ் பேரணியில் பங்கேற்றதால் அவர் தற்காலிகமாக அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு வருத்தம் தெரிவித்ததையடுத்து, மீண்டும் அவர் அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.