• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சென்னை வைஷ்ணவா கல்லூரியில் வேலை வாய்ப்புக்கான ஆலோசனை

Byஜெ.துரை

Feb 4, 2023

சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள வைஷ்ணவா கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான வழி காட்டுதல் மற்றும் வேலை வாய்ப்புக்கான ஆலோசனையும் வழங்கப்பட்டது..
வைஷ்ணவா கல்லூரியில் நடத்தப்பட்ட accounting process and latest accounting technology என்ற கோர்சில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் விருதும் வழங்கப்பட்டது.


மேலும் முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான banking and finance மற்றும் financial Market படிப்புக்கான துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் republic of Seychelles நாட்டின் consul general . M.சேஷா சாய் மற்றும் infact pro நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் Dr. பாலாஜி, பயிற்சி இயக்குநர் கௌரி சங்கர், இயக்குநர் வைஷ்ணவி ஆகியோர் கலந்து கொண்டனர்.இக்கருத்தரங்கில் கல்லூரியின் தாளாளர் அசோக்குமார் முந்ரா முன்னிலை வகுத்தார்,
கல்லூரியின் முதல்வர் கேப்டன்.சந்தோஷ் பாபு தலைமையில் கல்லூரியின் (pricepal incharge) முதன்மை பேராசிரியர் சேஷாத்திரி நாத் மற்றும் B.com Corporate Secretaryship துறையின் தலைவர் Dr. பிரபா, கார்த்திக் மற்றும் மாணவ மாணவிகள் விழாவில் கலந்து கொண்டனர்