• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சென்னை மாரத்தான் – அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

ByA.Tamilselvan

Jan 8, 2023

சென்னையில் மாரத்தான் போட்டியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார் . சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் நீரழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி திரட்டும் நோக்கிலும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் சென்னையில் இன்று அதிகாலை நடைபெற்றது. இருபாலருக்குமான இந்த மாரத்தான் பந்தயம் 4 வகையாக நடத்தப்படுகிறது.
முழு மாரத்தான் (42.195 கிலோ மீட்டர்), (32.186 கிலோ மீட்டர்), மினி மாரத்தான் (21.097 கிலோ மீட்டர்), 10 கிலோ மீட்டர் தூரம் என 4 பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது. முழு மாரத்தான் பந்தயம் நேப்பியர் பாலத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. இது சாந்தோம், அடையாறு மத்திய கைலாஷ், டைட்டல் பார்க், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், அக்கரை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அருகில் முடிவடைகிறது.
மினி மாரத்தான் பந்தயம் பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அருகே நிறைவடைகிறது. இந்த மாரத்தான் போட்டியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து 10 கிலோ மீட்டர் தூர பந்தயம் அதிகாலை 6 அணிக்கு நேப்பியர் பாலத்தில் இருந்து தொடங்கியது. இந்த மாரத்தான் சாந்தோம், அடையாறு வழியாக தரமணி சென்று முடிவடைகிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது.
இந்த மாரத்தான் போட்டிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.