• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சென்னை – அந்தமானுக்கு விமானச் சுற்றுலா செல்ல ஏற்பாடு..!

Byவிஷா

Jan 6, 2024

சென்னையில் இருந்து அந்தமானுக்கு விமானம் மூலம் சிறப்பு சுற்றுலா செல்வதற்கு ஐ.ஆர்.சி.டி.சி திட்டமிட்டுள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி எனப்படும் இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவு பல விமான சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் சென்னையில் இருந்து அந்தமானுக்கு சிறப்பு சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 23ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் இந்த சுற்றுலா ஆறு நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அது ஹேவ்லாக், நீல், போர்ட் பிளேயர் ஆகிய இடங்களை சுற்றிப் பார்க்கவும், தங்கும் வசதி, உணவு, கப்பல், விமான கட்டணம் போக்குவரத்து ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய கட்டணம் ஒருவருக்கு ரூ.51,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.